வாழ்க்கை வாழ்வதற்கே!...
Everybody lives by selling something... வாழ்வு வளம்பெற..
வர்த்தகக் கலைக்கு வாருங்கள்...
அன்று என் தந்தை எனக்கு புகட்டியது..
கலையை விற்றால் நிலைக்காது என...
இன்று எவன் கலையை விற்கவில்லை...
விற்பதற்காகத்தான், இதற்கு வர்த்தகக் கலை
(Commercial Art) என பெயர் சூட்டினார்களோ?
இன்று எந்தக்கலையை எடுத்தாலும் அதில் எவன் அதிக வேதனம்
பெறுகிறானோ அவன்தான் பெரிய கலைஞன்...
இன்று பழைய புகழ்பெற்ற கலைஞனின் படைப்பையெல்லாம் ஏலம்
போட்டு விற்கவில்லையா?...
ஏன் Michael Jackson சிறந்த கலைஞன், சும்மாவிட்டார்களா?..
குரலை மட்டுமல்ல... அவனது உடைகளைக்கூட விடவில்லை.
ஏலம் போட்டு விற்கிறான்...
இன்று கலைக்கு மதிப்புக்கொடுப்பதே நீங்கள் என்ன விலைக்கு
அதை விற்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது...
நான் கூறுவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் விட்டுவிடுங்கள்.
எனது அன்புக்குரிய ஒவிய நண்பர்களே! இன்றைய நவீன உலகில்
முன்னேறுவதானால், முடிந்தளவு கணணியோடு கூடிய சித்திரத்தையும்
கற்கப்பாருங்கள். உதாரணமாக Quark X Press, Corel Draw, Illustrator,
Designer, PhotoShop... மேலும் எத்தனையோ தரமான கணணி
மென்பொருட்கள் (Softwares) இருக்கின்றன. திறமையுள்ளவன்,
தனது கற்பனையைம் சேர்த்து உலவவிட்டால் அவனே ஆச்சரியப் படக்கூடிய
படைப்புகளை படைக்கலாம். படைப்புகள் நிச்சயம் உனக்கு நல்ல புகழைமட்டுமல்ல
ஊதியத்தையும், பெற்றுத் தரும். வழிகாட்ட நல்ல நண்பர்களும் கிடைத்துவிட்டால்
உன் வாழ்வு மேலும் வளம்பெறும்.
அடியேன் உண்மையாக அறிமுகப்படுத்த வந்தது என்னவென்றால் என்னால் முடிந்த,
எனது அறிவுக் கெட்டிய வரையிலும், நான் பெற்றுக்கொண்ட தொழில்நுட்ப
அறிவுமட்டத்திலும் உருவாக்கிய சில கணணி எழுத்துருக்களைத்தான்.
பார்த்துவிட்டு ஏனோ தானோவென போட்டுவிடாமல், இதை வாசிப்பவர்களுக்கு இதில்
வரும் எழுத்துருக்களுக்கு ஏன் இந்த பெயர்களைச் சூட்டினேன் எனச் சொல்ல வந்து,
அந்த உறவுகளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு என மாறி, அந்தவேளைகளில்
நான் பட்ட சுக துக்கங்களையும் கிடைத்த அனுபவங்களையும்,
உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டியாதாயிற்று.
இதை வாசிக்கும் ஒரு ஒவியனாவது இவன் ஏதோ சொல்கிறான்
என்று சற்று யோசிப்பானேயானால் பெருமகிழ்ச்சியடைவேன்.
கலை அது நிலையானது. விலையற்றது. இந்த நவீன உலகில் விலை பேசாவிட்டால்
அதுற்கும் மதிப்பில்லை, உனக்கும் மதிப்பில்லை.
Live and let live...
வாழ் வாழ விடு.. ஒருவன் இறந்தபின்தான் அவன்செய்த நன்மை தீமைகளை சீர்தூக்கிப்
பார்க்கும் இந்த மனித சமுதாயத்தில், நானும் அதற்கு விதிவிலக்கல்ல, ஆனால் எனது
வாழ்க்கைப் பாதையில் நான் ஏறிவந்த ஏணியில் எனக்கு பக்க பலமாகவிருந்து வழிகாட்டி
என்னுடன் சேர்ந்திருந்து இன்று என்னுடன் இல்லாத உறவுகளை யோசித்துப் பார்க்கையில்
நான் அவர்களுக்கு ஏதாவது பிரதியுபகாரம் செய்தேனா என்றால் ஒன்றுமேயில்லை...
இப்போ எதுவும் செய்யவும் முடியாது.
எனது சிறுபிள்ளைப் பராயத்திலிருந்து தந்தையிடம் பார்த்துக் கற்றுக் கொண்ட
ஒவியக்கலைக்கு எப்போதும் நான் ஒரு அடிமை. கைத்தொழிலொன்றைக் கற்றுக்கொள்...
கவலை உனக்கில்லை..... என்பார்கள். ஒரு நல்ல ஓவியனுக்கு கைத்தொழில் அவன்
கையிலேயே இருக்கிறது.... இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.
கணணி வந்து பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இது புத்திசாலித்தனம், திறமை,
விடாமுயற்சியுள்ள ஒரு ஓவியனை எந்த வகையிலும் பாதிக்கமாட்டாது. எப்படியெனில்
அந்த ஓவியனே கணணியைக் கற்றுக்கொண்டால் அவன் அதையே அடிமையாக்கிவிடலாம்
அல்லவா?..... இந்த ஓவியத்துக்கு அடிமையான என்னை, மேலும் அடிமைகொண்டு அதிலேயே
ஊறவைத்து திறம்பட வளர்த்துவிட்ட இடம் திரைப்படமாளிகைகளே. நான் எழுத்துக்கள் (titles)
மட்டுமே பார்த்த திரைப்படங்கள் அதிகமெனலாம். எனக்கு எழுத்துக்களில் ஒரு அலாதிப்பிரியம்.
இந்த எழுத்தால்தான் ஒரு சாதாரண ஓவியனான நான் வர்த்தகக் கலையில் அடியெடுத்து...
தலைநகர் கொழும்பில் அந்த நாட்களில் முன்னணியில் திகழ்ந்த தரமான விளம்பர நிலையங்களில்
Art director, Creative director என நல்ல பதவிகளில் திகழ்ந்தேன்.
திரைப்படமாளிகைகளில் ஐயோ எவ்வளவு பெரிய எழுத்துக்களைக்கூட, எத்தனை எழுத்துக்கள்
இருந்தாலும் அங்கும், இங்கும் ஒருபார்வை... அடிமட்டமில்லை.... பென்சிலில்லை... rough sketches
எதுவுமில்லை. எடுத்த எடுப்பிலேயே எழுதுமிடம் படமாளிகைகள்தான். தரமான Sable,
Squirrel Hair brush களே தேவையில்லை. ஒரு பனை மட்டையோ? இல்லை தேங்காய் மட்டையோ?,
ஒரு மைபூசும் பெரிய பிரஸ் இருந்தாலோ போதும் விளாசித் தள்ளி விடுவார்கள். அந்த நாட்களில்
நானே எனக்கு விருப்பமான முறையில் எழுத்துக்களை அழகுபடுத்தி மாற்றியெழுதுவேன்.
1990 களில், புலம்பெயர்ந்து நோர்வே வந்த எனக்கு நல்லதோர் நோர்வேஜிய நண்பரும்,
சந்தர்ப்பமும் கைகூட, இலவசமாக கணணி சம்பந்தமான பல பாடங்களுடன் Computer Graphics ம்
படிக்கக் கிடைத்தது என் அதிர்ஷ்டம். என்னைப் பொறுத்தமட்டில் கணணியின் வருகையால்
திறமையான பல ஒவியர்கள் மட்டுமின்றி, பல சிறிய அச்சகங்களும், மேலும் பல விளம்பர
நிலையங்களும், பாதிக்கப்பட்டுள்ளன என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
நான் கணணியில் தமிழ் எழுத்துக்களை உபயோகப்படுத்தும்போது ஒரு சில எழுத்துருக்கள் தவிர
பல எழுத்துருக்களில் வழுக்கழும், ஒழுங்காக அமைக்கப்படாததும் கண்டு, நானும் என்னாலியன்றளவு,
திருத்தத்தோடு சில எழுத்துருக்களை அமைப்பதோடு, புதிய என் கற்பனையில் உருவான சில
எழுத்துருக்களையும் வெளிக்கொணர்வது என தீர்மானித்து இந்த முயற்சியில் இறங்கினேன்.
இந்த நீண்ட நாளைய என் ஆசை பூர்த்தியாக பலஆண்டுகள் ஆயினும் என் அறிவுக்கெட்டிய
வரையிலும், என்னால் முடிந்தளவு நான் அறிந்த கணணி அறிவு, ஓவியஅறிவு,
கேத்திரகணித பொறிமுறைச் சித்திர அறிவு, மற்றும் காலப்போக்கில் நான் கண்ட ரசித்த
என் மனதைப் பாதித்த வேற்று மொழி எழுத்துருக்களையும் அடிப்படையாகக்கொண்டு
இக் கணணி எழுத்துருக்கோப்பை அமைக்க முயன்றேன்.
இவ்வேளையில்தான், ஒவ்வொரு எழுத்துருவுக்கும் எப்படி பெயரிடுவது என யோசித்தபோது
எனது முன்னேற்றத்தில் ஊக்கம் தந்து, இன்று எம்முடனில்லாத அந்த நல்ல உள்ளங்களை
மனதில் கொண்டு அவர்களின் பெயர்களைச் சூட்டி அழகுபார்ப்பது, காலா காலம் அவர்களின்
பெயர்களும் நிலைத்து நிற்க வழிவகுக்குமல்லவா? என எண்ணினேன். அடுத்து எனக்கு
ஊன்றுகோலாக நின்று நான் பல படிகளை தாண்டி முன்னேற உதவிய அந்த நல்ல உள்ளங்களை
எண்ணிப்பார்க்கவும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
நட்பு அது துாய்மையானது. நட்பு நீடிக்கவேண்டுமானால் நண்பனிடமுள்ள நல்லவற்றை
மட்டும் பார். தீயவற்றை விட்டுவிடு. தீர விசாரிக்காமல் சுட்டிக்காட்டி பகைமையை
வளர்க்காதே. நல்ல முறையில் எடுத்தக்கூறி அவனையும் திருத்தப்பார்.
இறைவன் ஒவ்வொருவருடனும் சேர்ந்திருக்க முடியாதென்பதால்தான் உலகில்
நண்பர்களை படைத்தான். அவர்களை தேவைக்கு மாத்திரம் பாவித்து விட்டு கேலி பேசி
பகைத்துக்கொள்வது அந்த இறைவனையே உதாசீனப் படுத்துவது போலாகும்.
"Friends are born, not made."
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள். உங்களோடேயே சேர்ந்திருந்து,
சந்தர்ப்பம் வரும்போது தாங்கள் ஒன்றுமே செய்யாமல் மற்றவர்களைப் பார்த்து
என்னத்தை கிளித்தார்கள் என வெட்டுப்பேச்சு பேசி காலைவாரும்
நண்பர்களைத் தவிருங்கள்.
நான் சொன்னவைகளிலோ அல்லது எழுத்துருக்களிலோ பிழைகள் ஏதும் இருப்பின் என்னை
பெருமனது கொண்டு மன்னிப்பதோடு எனக்கு அறியத் தருவதை இருகரம் கூப்பி வரவேற்கின்றேன்.
எதிர்வரும் காலங்களில் வருங்கால சமுதாயம் பல திருத்தங்களோடு கூடிய நல்லபல தமிழ்
எழுத்துருக்களை கணணிச் சந்தையில் படைக்க வேண்டுமென எதிர்பார்த்து வாழ்த்தி
இந்த கடலளவு ஓவியக் கலையில், கையளவு நான் பொறுக்கியவைகளை உங்கள் முன்
பார்வைக்கு வைக்கிறேன்.
என்றும் உங்கள் அன்பன்
மோகன் கனகசபை, நோர்வே. 2010
mogans.com
தொடர்ச்சி மறு பக்கம்..