Fonts cont... 5
எங்களுக்கு வர்த்தகக் கலை விற்பனைக்கு...
ஒரு உண்மையான ஓவியனுக்கு?
வசீகராவில் Art Director ஆக வேலை செய்த காலம்.
Ceylon Oils & Fats Corporation க்கு ஓர் மாதிரிக்கலண்டர், பகல் இரண்டு
மணிக்கு முதல் அங்கத்துவக்கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம்
பெறவேண்டும்.
துரிதமாக தயாரிப்பில் இறங்கினேன். அவ்வேளையில் ஒரு நல்ல திறமையான
சித்திர படக்கதை ஓவியர் "சந்திரா" (ராமச்சந்திரன்) என் தலைமையின் கீழ்
பணியாற்றினார். அவரிடம் ஒரு Rough Sketch வரைந்து காட்டி " சந்திரா .... ஒரு பெண் இளநீர்க்குலையும், கூடையில் முட்டையோடும் இருந்து, விற்பனை செய்யும்
காட்சியை (உதாரணம் கஜூகம) வரை" என்று அளவுகளை கூறி, கூடியளவு,
பெரும்பான்மை இனப்பெண்ணாக இருப்பது நல்லது என்றும், கூறிவிட்டு,
மற்ற பெண் ஓவியரிடம் கலண்டருக்கு அளவான திகதித் தாளை வரையச்சொன்னேன்.
காலை எட்டு முப்பதுக்கு ஆரம்பித்த சந்திரா கிட்டத்தட்ட முடித்து விட்டார்.
அழகிய ஒரு தமிழ்மணம் கமழும் பெண் படத்தில் இருந்தாள். நெற்றியில் பொட்டு மட்டும்
இல்லாத குறை. பரவாயில்லை Rough visual தானே விளங்கப்படுத்தலாம். ஆனால்,
சந்திரா சித்திரத்தை தருவதாக இல்லை. விரைவாக முடியென்றேன்.
அவர் " கொஞ்சம் பொறுங்க சார் " என்று பென்சிலைச் சீவி அதன் துாளை தொட்டு
படத்தின் கன்னத்தில் மெல்ல மெல்ல தடவிக் கொண்டிருந்தார். திகதித்தாளும்
ஒட்டியாயிற்று. ஆண்டு, நிறுவனப்பெயர், எல்லாம் எழுதிவிட்டார். தருவதாக இல்லை.
நேரமும் ஒன்று தாண்டுகிறது. பொறுமையிழந்து தருகிறாயா எனக்கேட்க,
பென்சில்துாளை விரலில் எடுத்தபடி, " மார்பகத்தை கொஞ்சம் இலேசாக தட்டி அழேகாக
எழுப்பிவிட்டுத் தருகிறேன் " என்றாரே.... கோபத்தில் " இப்போ அதற்கு நேரமில்லை,
கூட்டத்தில் காட்டிவிட்டு கொண்டு தருகிறேன்.. தேவையான அளவு தட்டி
எழுப்பி அழகுபார்." என்று பறித்தெடுத்தபோது அவரது முகம் சோர்ந்து போன
போக்கு இன்றும் என்முன் நிழலாடுகிறது.
வர்த்தகக் கலைக்கு என்னை முழுமையாக மாற்றிவிட்ட நான், அந்த உண்மைக்
கலைஞனுக்காக மனம்வருந்தினேன். அழகைப் பார்த்துக் கொண்டிருந்தால் பட்டினிதான் மிஞ்சும்.

மாமனா? மைத்துனரா? எப்படியும், அழைக்கலாம்.
ஆனால் அவர் அன்பாக அழைப்பது தம்பி என்றுதான்.
பேசிக்கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
அதுதான், பேசியது போதுமென்று போய்விட்டாரோ?
அந்த உண்மையான உள்ளம் சரவ(ணா) ணமுத்துத்துவுக்கு
ஒரு முத்தான எழுத்துரு.
துணிந்து செய்... தொடர்ந்து செல்...
தோல்வி கிடையாது தம்பி...
83 கலவரத்தின் பின்னர் ஷெனித் நிறுவனத்தில், தொடர்ந்து வேலை செய்தாலும்,
தனிப்பட்ட முறையில் நான் வசீகரா, சிலிங்கோ விளம்பர நிறுவனங்களிலும்,
வேலை செய்த காலமது.
நான் மட்டக்குளியவில் தங்கியிருந்தேன். அவ்வேளையில் எதேச்சையாக
வெள்ளவத்தையில், எனக்கு அண்ணர் உறவான திரு. நடேசன் என்னும்
ஒரு உன்னத மனிதரை சந்தித்தேன். கண்டவுடனேயே எங்கு தங்கியிருக்கிறாய்.
நான் தனியாகத்தான் இருக்கிறேன், நீயும் என்னுடனேயே வந்து தங்கலாமேயென
அன்புக்கட்டளையிட்டார். என்னால் மறுக்கமுடியாமல் அவர் வீட்டிலேயே
அவருடன் தங்கியிருந்தேன்.
அவர் பேசுவதையே கேட்டுக் கொண்டிருக்கலாம். ஒரு குழைந்த நளினமான
மொழி பேசுவார். நல்லதொரு புத்திசாலியென்பதைவிட ஒருவரை பார்த்தவுடன்,
ஒரு சில நிமிடத்தில் இவர் இப்படியானவர், என்று கணித்துவிடும் சாமாத்தியசாலி.
என்னுடன் எனது வேலைவிடயமாக அடிக்கடி அளவளாவுவார். எனது தொழிலும்
விளம்பரம் சம்பந்தமானதால் பலரின் அபிப்பிராயங்களையும் செவிமடுப்பேன்.

என்னை பலமுறை ஊக்குவித்து பயப்படாமல் நான் தரும்
கடிதத்தை கொடு உனக்கு இருமடங்கு சம்பள உயர்வு கிடைக்கிறதா,
இல்லையா? பார் என சோதிடர்போல் அவர் சொன்னது,
அப்படியே நடந்திருக்கிறது. எனது மனேஜரே நீ ஏதும் சட்டவல்லுனருடன்
கலந்தாலோசித்தா இக்கடிதத்தை எழுதினாய் எனக்கேட்டிருக்கிறார்.
மற்றவர்களுக்கு ஆலோசனையும், புத்திசொல்லவும், என்றே பிறந்தவர்.
பாவம் பார்ப்பதில் வல்லவர். அந்தக் காலகட்டத்தில் எனது
முன்னேற்றத்துக்கு பல வழிகளில் புத்தி கூறி உதவிய
அந்த நடேசன் அண்ணன் இன்று எம்முடன் இல்லை. அந்த ஆண்டவனுக்கும், அவர் தேவையோ? முதுமையாகு முன்னரே அவரை ஆண்டவன் அழைத்துவிட்டான்.
சாதாரண விளம்பரத்தில்
இப்படியும் ஒரு காதலா?
கல்முனை படமாளிகையில் ஓவியனாக இருந்த வேளையில் பட விளம்பரம் எழுத ஆரம்பித்தவுடன்,
மனேஜராக இருந்த, கல்முனை வீரகேசரி நிருபர் முஸ்தபா, வசந்தன் உட்பட பல நண்பர்கள்
வட்டமாகக் கூடிவிடுவார்கள். சிலர் அந்த எழுத்து அழகு, இந்த எழுத்து அழகு, பூக்கீறு, காய் கீறு,
பழங்கீறு என ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.
அவ்வேளையில் படமாளிகையில் கடமையாற்றிய நண்பர் ஒருவர், எப்பொழுதும் கச்சிதமான
உடையணிந்தேயிருப்பார். அழகான சுருட்டை முடி. பளிச்சென்று கம்பீரமாக தோற்றமளிப்பார்.
அதேபோல் போஸ்ரர்களும் மிகவும் அழகாகவும், எழுத்தைச்சுற்றி வெற்றிடம் கூடுதலாகவும்
இருப்பதை விரும்புபவர். மற்றவர்களுக்கு எதிர்மாறு. கோடு, நட்சத்திரம், வளைவுகளைப்
போட்டு நிரப்புவதை விரும்பாதவர். ஒரு திரைப்படம் எழுத்துக்கள் மிகவும் குறைவு.
படம் ஞாபகமில்லை. சுற்றிவர வெற்றிடமிருந்ததால், ஏதாவது போட்டு நிரப்பு என நண்பன்
வசந்தன் சொல்ல, எனக்கும் அதில் உடன்பாடில்லை, அவனுக்காக மெல்லிய வண்ணத்தில் சில
நட்சத்திரங்களை போட்டுவிட்டு இருவரும் தேனீர் அருந்தச் சென்றுவிட்டோம்.
திரும்பி வந்து பார்த்தபோது, என்ன ஆச்சரியம், போஸ்டர் பளிச்சென்று எழுத்துக்களைத்தவிர
சுற்றிவர நான் வரைந்த ஒரு புள்ளிகூட இருக்கவில்லை. இருவரும் திகைத்து நிற்கையில்,
கம்பீரமாக வந்த அந்த நண்பர் சொன்னார், நீ வடிவாக எழுத ரசனையில்லாத எந்த நாயோ
நட்சத்திரமெல்லாம் கீறிக் குப்பையாக்கியிருக்கு அதுதான் துடைத்துவிட்டேன் என்றார்.
" எப்படி? எதனால்? துடைத்தீர்கள் " என்றேன். தனது சுத்தமான வெள்ளை கைக்குட்டையை
வெளியிலெடுத்துக் காட்டினார் பாருங்கள்.
ஆஹா இவனல்லவா உண்மையான ரசிகன். நான்தான் அந்த நாய் என்று சொல்லவும் வெட்கம்.
சிரிப்பதா? அழுவதா? என்ற நிலை எங்களுக்கு. சாதாரண இரு நாள் விளம்பரத்தில் கூட
இவருக்கு இவ்வளவு ஒரு காதலா என வியந்தோம். எப்போது அந்த Mr. Macbool ஐ கண்டாலும்
இதுதான் முதலில் ஞாபகம் வரும்.
Tastes differ...
தொடர்ச்சி மறு பக்கம்..