Fonts cont... 7
1979 ல் இலங்கை வானொலியில் அறிமுகமான காலத்தில் எங்களுக்கு அறிவிப்பாளர்
பயிற்சியளித்தவர்கள் இருவர். ஒருவர் B.H.அப்துல் ஹமீத், மற்றவர் ஜோர்ஜ் சந்திரசேகரன்.
அப்துல் ஹமீத். அவர்கள் என்னைப் பொறுத்தமட்டில், எல்லோரையும் மதித்து பக்குவமாக
பழகக்கூடிய ஒரு நல்ல மனிதர். ஒரு பிரபல விளம்பர நிறுவனத்தில் ஒரு முக்கிய பதவியில்
இருப்பவன் என்று என்மேல் நல்ல மதிப்புமுள்ளவர். மிகவும் நல்ல கண்ணியமான ஒரு மனிதர்.
நான் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளனாக கடைமையாற்றிய வேளையில்,
எண்பத்துமூன்று கலவரத்தின் பின்னர், வெளிநாடு சென்று வேலைதேடி சிங்கப்பூர், மலேசியா ஆகிய
நாடுகள் சுற்றி ஆறு மாதங்களின் பின்னர், திரும்பி நாட்டுக்கு வந்த போது, என்னை எதுவித
காரணமுமின்றி, அப்போது தலைமைப் பதவியிலிருந்த ஒரு பெரிய மனிதரால் பழிவாங்கப்பட்டு
ஒரு வருடம் வெளியிலிருந்தேன். அந்த காலகட்டத்தில், பலர் என்மேல் கருணைகாட்டினாலும்
தானாக முன்வந்து எனக்கு கைகொடுத்து, திரும்பவும், என்னை இலங்கை வானொலிக்குள் வர
வழிசெய்த ஒரு உத்தமர் B.H. அப்துல் ஹமீத். முதல் முதலாக என்னை ஒரு திரைப்படத்துக்கு
Title Artist ஆக (பசுமையைத்தேடி) அறிமுகப் படுத்தியது மட்டுமின்றி, எனக்காக
Cinema Titles எழுதுவதற்கான சில Technical information களையும் அறிந்துவந்து
கூறியவர். அந்த உங்கள் அன்பு அறிவிப்பாளனையும், இந்த இடத்தில் நன்றியுடன்
நினைவுகூருகின்றேன்.
True happiness comes from helping others....
நான் ஊரிலே வாலிபனாக வாழ்ந்த காலத்தில் நான் மதிப்புக் கொடுக்கும்,
ஒரு உத்தம மனிதன், அண்ணன் சோதீஸ்வரன். தனக்கு வேலைக்கு
விண்ணப்ப பத்திரம், தட்டெழுத்து செய்ததைவிட மற்றவர்கட்கு
விண்ணப்பப் பத்திரம் தட்டெழுத்து அடித்ததுதான் அவன் கூட. குறிப்பிட்ட
வாலிப வயதிலேயே நல்ல தொழிலோடு கம்பீரமாக ஊரில் நடைபோட்டவன்.
இவனது புத்திமதி கேட்டு உயர்ந்தவர்கள் பலர். மற்றவர்க்கு உதவி செய்யவேயென
நல்ல பெற்றோர்களின் வயிற்றில் உதித்த ஒரு உத்தமன்.
கோபம் இவனுக்கும் வருமா? எனத் திகைத்திருக்கிறேன்.
இவனுக்கும் கோபம் வருமாம் எனக்கேள்வியுற்றபோது மலைத்திருக்கிறேன்.
அவன் மறைந்தான் என்று கேள்வியுற்றபோது, கண்கலங்கினேனேயொழிய
இரவல் இணையத்தில், என் பங்களிப்பில் உலாவவரும், எம்மோடு சேர்ந்து
பிரிந்தவர்களின் நினைவாக, நான் பெயர் கொடுத்த இரவல் பெயரான
”நீங்காத நினைவுகளில்” தான் என் மனத்துயரைப் பகிர்ந்து கொண்டேன்.

அண்ணா... சோதி யே! ...
மற்றவர்க்கு உதவுவதில் நீ ஓரு ஜோதியே !...
மற்றவர்களுக்காக வர்த்தமானி, வேலை வெற்றிடம்
தேடுவதில் நீ ஒரு மன்னன்....
பாதியை நாங்கள் சொன்னால் மீதியையும், சேர்த்தெழுதி
குறித்த தேதியிலே கொடுப்பவன் நீ.
நீ நீதியாக நடந்ததால்தான் சோதி அண்ணா....
உன்னையவன் பாதியிலே பறித்தானோ.....
அண்ணா சோதீஸ்வரா உன் பெயர்
நிலைக்க ஒரு ‘சோதி’ எழுத்துரு....
ஒரு ஓவிய நண்பரின் உண்மைச் சம்பவம்...
ஜோர்ஜ் சந்திரசேகரன். இவர் நல்லதொரு அறிவிப்பாளர் என்று தெரிந்தவர்களுக்கு
நல்லதொரு ஓவியர் என்பது பலருக்குத் தெரியாது. அந்த நாட்களில்
கலைஞனென்றாலே வறுமையும் சேர்ந்திருக்கும். அவர் சொன்ன உண்மைச்
சம்பவமிது. நான் சிறுவனாக இருந்த காலத்தில் வீரகேசரியில் "துப்பறியும் சிவம்" என்றொரு
சித்திரத்தொடர்கதை வரும். ஆவலுடன் எதிர்பார்த்து வாசித்ததுமுண்டு.
இதற்கு கதை எழுதி, படமும் வரைந்தவர் இந்த நண்பர் ஜோர்ஜ்தான். இக்கதையில் வரும்
துப்பறியும் சிவம் பாத்திரத் தோற்றம் சக அறிவிப்பாள நண்பர் நடராஜசிவமேதான். இந்த
தொடருக்கு சித்திரம் வரைய (Indian ink) கறுப்பு மை முடிந்து விட்டதாலும், வாங்க
கையில் பணமில்லாத காரணத்தாலும், எப்படியும் காலையில் சித்திரம் கொடுக்கவேண்டிய
நிர்ப்பந்தத்தினாலும், ஒன்றுமே செய்யமுடியாமல், இறுதியில் ஒரு யுக்தியைக்
கையாண்டாராம். தன்னிடம் கையிலிருந்த கறுப்பு சித்திரத்தாளில் வெள்ளை போஸ்ரர்
கலரினால் திடீரென லைற் அணைந்தது.... என ஒரு மூலையில் எழுதி விட்டு, பாத்திரங்களின்
குரலில் ஒலிக்கும் வார்த்தைகளை மட்டும், வெள்ளை மையால் எழுதி இருநாட்களுக்கு
ஓட்டிவிட்டாராம். பத்திரிகை ஆசிரியர் முதல் பார்த்த எல்லோரும்,
என்ன கற்பனையென புகழ்ந்தார்களாம். " எனக்கல்லவோ தெரியும் நான் பயந்த பயமும்...
வேதனையும் " என்றார்.

அந்த ¨சும்மா இருப்பதே சுகம்¨ என்று அடிக்கடி கூறும்
ஜோர்ஜ் சந்திரசேகரன் என்னும் கம்பீரமான அந்தக் குரலும்
ஓலித்து மறைந்துவிட்டது.....
நான் நேரர்வேயிக்கு வந்து முதலில் சந்தித்த ஒரு
இலங்கை நண்பர் திரு. பிரட்ரிக் குமார் அந்தோனிப்பிள்ளை
என்பவர். பழகுவதற்கும், நட்புக்கும் ஒரு
இலக்கணமானவர். எப்பொழுதும் சிரித்த முகமும்,
குழந்தைத் தனமான போக்குமுள்ளவர்.
பல வெளிநாட்டுச் செய்திகளை அறிந்து வந்து
அலசியாராய்வதில் மன்னர்.
நேரர்வேயில் நான் பழகிய நண்பர்களிலே எல்லேரர் மனதிலும் இடம்பெற்று வாழ்ந்தது போதுமென எங்களை விட்டுப் பிரிந்து முதலிடத்தைத் தட்டிக்கொண்ட அந்த குமார் என்ற அன்பு நண்பரையும் எவராலும் மறக்கமுடியுமா?
தொடரும்.....