Fonts cont... 2
கொள்ளுப்பிட்டி (இவ்வேளையில் நானும் இவருக்கு visitor ) நாரஹன்பிட்டி ஆகிய
காவல்நிலயங்களில் கடமையாற்றிய எனது அயல்வீட்டு அன்புள்ளம் திரு.நிர்மலேஸ்வரன்.
எங்கள் இருவருக்குமிடையில் ஒரு நல்ல புரிந்துணர்வுத் தன்மையுண்டு.
ஒரு காலத்தில் எங்களின் பிரச்சனைகளை, நாங்கள் ஒருவருக்கொருவர், பகிர்ந்து கொண்டு
இரவிரவாக நடந்து திரிந்தவைகளை Park Road, திம்பிரிகஸ்யாய, கிரிலப்பனை வீதிகளும்,
நாரஹன்பிட்டிய 'Sha....', Sapphire, Fort police mess களும் கூறும்.
அவருக்கு day patrol duty அதிகமாக Park Road, Havelock Road junction ல் உள்ள
எனது காரியாலயத்தின் முன்னால்தான். ஒரு தொழிலகத்தில் நீ எப்படி உன் திறமையைக்காட்டி
கடமை புரிகிறாயோ, அதை அந்த தொழிலகம் உன்மேல் காட்டும் மதிப்பும், மரியாதையிலும்
தெரிந்துகொள்ளலாம். எனக்கு Zenith Advertising ல் இருந்த மதிப்பும், மரியாதையையும்
இவர்களிடம் கேட்டால் தெரியும்.
இந்த நிர்மாவும், இன்னுமொரு நல்ல நண்பர் சோமதேவவும், வீதியின் எதிர்ப்பக்கத்தில்
நின்று மேலே என்னைப் பார்த்து கையசைத்து, நான் கீழே இறங்கிவரும் வரை என்னுடன் சேர்ந்து
தேனீர் அருந்தக், காத்துக்கொண்டு நிற்பார்கள். இது அடிக்கடி இடம்பெறும் சம்பவம்.
இந்த இரு நண்பர்களுடன் நடந்த ஒரு சுவையான சம்பவம். ஒரு நாள் நீண்டநேரம் எனக்காகக்
காத்திருந்த அலுப்பில், இருவரும் எனது காரியாலய reception க்கு வந்து Receptionist ஜெயாவிடம்,
அவர்கள் காவல்துறை உடுப்போடு என்னை விசாரிக்க, அவள் பயந்துபோய் ஏதோ கற்பனை பண்ணி
என்மேல் அவள் கொண்ட பாசத்தில் அவர்களை இருக்கச் சொல்லிவிட்டு, Managing Director, ஆக
இருந்த Mrs.Dean யிடம் அறிவிக்க, "அவனைக் கீழே இறங்க வேண்டாம்," எனக்கூறு என ஜெயாவிடம்
ரகசியமாகச் சொல்லிவிட்டு, இந்த இரு நண்பர்கள், சொன்ன எதையுமே காதில் வாங்காமல்,
உள்ளே அழைத்துச் சென்று கௌரவப்படுத்தி conferance room ல் இருத்தி உபசரித்து....
¨இது இரவு குடித்துவிட்டு... என்ன திருவிளையாடல் செய்ததோ "... என புறு புறுத்துக்கொண்டு அவரே
மேலே ஓடிவந்து பொலீஸ் உன்னைத்தேடி வந்திருக்கிறது என்ன செய்தாய் என உறுக்கினார்.
எனக்கு விடயம் விளங்கிவிட்டது.
அவ்வேளையில் உள்ளே காவலர்களோ பயந்துபோய் என்ன நடக்கப்போகிறதோ என
நடுங்கியிருந்தார்கள். காரணம் இந்த மனுசி, தனக்குத்தெரிந்த ஏதாவது மேலிடத்துக்கு,
போன் பண்ணப்போய், தர்மசங்கடத்தில் நாங்கள் டியூட்டி நேரத்தில் மாட்டிவிடுவோமோவென.
நான் MD ஐ விலக்கிவிட்டு கீழே ஓடி வந்து பார்த்தபோது அவர்கள் என்னைப் பார்த்த பார்வை,
பாவம்போல இருந்தது. ஆனால் அவர்கள் கூறியவை?...
எழும்பி தழுவிய அவர்களில் ஒருவர், பல்லைக் கடித்து "வெளியே வா நாயேயென...".
மற்றவர் "உம்ப எலியட்ட எண்டபாங்.. வளமு.." என்றார். என்ன நடக்கப் போகிறதோ என
எதிர்பார்த்துக் காத்திருந்த எனது காரியாலய சக உத்தியோகத்தர்கள், MD உட்பட நாங்கள் கைகோர்த்த
வண்ணம், அறையிலிருந்து வெளியே வருவதை ஆச்சரியத்தில் நோக்க, வந்த கையோடு
நான் My best friends, என்றதும் சக ஊழியர்கள் எல்லோரும் கொல்லென்று சிரித்துவிட்டார்கள்.
பதட்டத்தில் ஓடித்திரிந்த MD க்கு தர்மசங்கடமாய் போய் விட்டது. அவர் சுதாகரித்துக் கொண்டு
ஜெயாவை முறைத்துப் பார்க்க ஜெயா வெட்கித் தலை குனிந்தாள். வெளியே வந்ததும்,
" வேண்டாண்டா சாமி இனிமேல் உண்ட ஒபீஸ்... எங்க பார்த்தாலும் உஸ்.. பிஸ்ம்... எவனும்
ஒன்றும் கேட்கிறானில்லை..". ஆ... உனக்கு.... என அன்பாக இருவரும் தேனீர் கடைக்குள்
வைத்து முதுகில் குத்திய குத்து இன்றும் இனிக்கிறது.

கற்பகம்... என் அம்மம்மா..
கற்பகமே நீ ஒரு தருவம்மா...
சைவவினாவிடைக்கு என நான் உன்னிடம் கறந்தபணம்..
பல நுாறு சைவவினாவிடைகளை அச்சடித்திருக்கலாமே...
ஒளவை முருகனுக்கு எப்படியோ? எனக்கு நீ!
சுந்தராம்பாளைத்தான் ஒளவையாகக் கண்டிருப்பார்கள்.
ஆனால் நீதான் எனக்கு ஒளவை.
என்னால் முடிந்தது.... தருவே உன்பெயரில் ஒரு எழுத்துரு....
இதுமட்டுமா?.. இன்னுமொரு நாள் நாரஹன்பிட்டி 'Sha.....' ல் நடந்த சம்பவம்.. இங்கே அவர்களுக்கு
சலுகை விலையுண்டு. ஒருநாள், இந்த 'Sha.....' க்கு நண்பர் நிர்மாவும், அவரது சக ஊழியர்கள் மூவரும்,
(எனக்கும் இவர்கள் அன்றும் இன்றும் நண்பர்கள்) நானும் சென்றிருந்தோம். நண்பர்களில் ஒருவர்,
எங்களுக்கு பரிமாறிய waiter என்னிடம் ஒழுங்காக பில் பணம் முழுவதையும் பெற்றதற்காக,
வேண்டாம் பிரச்சனை நாம் போவோம் என நான் கூறியும், முட்டைக்கூடையைத் துாக்கி காசாளருக்கு
எறிந்து பெரிய ரகளையே ஆக்கிவிட்டார். இது சரியா என்று நான் கேட்டதற்கு, எங்களோடு வந்தால் நீயும்
பொலிஸ்தான், வாயைப் பொத்து என்று சொல்லி விட்டார்கள். ஊழியர்களோ கத்தி, பொல்லோடு வந்துவிட்டார்கள்.
எல்லோரும் துணிந்து நின்றார்கள். இறுதியாக கொட்டும் மழையில் உரிமையாளர் வந்து மன்னிப்புடன்,
சமாதானப்படுத்தியபின்தான் சமாதானமானார்கள். தேவைக்கு மட்டும் சேர்ந்து பழகிவிட்டு,
எப்போது காலைவாருவோமெனக் காத்திருக்கும் பெயருக்கு மட்டும் நண்பர்களாக, தற்புகழ்ச்சி பாடுவோரோடு
ஒப்பிடுகையில் இவர்களல்லவா நண்பர்கள்....
"The best mirror is an old friend."

நெஞ்சம் மறக்குமா?
சிறுவயதில் எனைத் துாக்கி வளர்த்து என்னுடன் விளையாடி,
குளிப்பாட்டி, துவிசக்கரவண்டி பழக்கியது முதல் திரைப்படங்கள்,
வலம்புரி சைக்கிளோட்டம், தீப்பாய்தல், களியாட்ட நிகழ்ச்சிகள்
போன்றவைகளுக்கு அழைத்துச்சென்றது வரை, துணிவு வாழ்க்கைக்கு
மிகமுக்கியம்.. தம்பி, எதுக்கும் பயப்படக்கூடாது என நெஞ்சில்
துணிவை ஊட்டிய அந்த சிறிய தகப்பன்... திரு.நேச(ம்) துரை ஆசிரியன். அவரோடு சிறிய வயதில் வேட்டையாடப்
போய் இன்புற்ற நாட்களைத்தான் மறக்க முடியுமா?
அந்த சிறிய தந்தையையும் எண்ணிப்பார்த்ததில் இவ்வெழுத்துரு பிறந்தது.
When you are in the light, Everything follows you,
But When you enter the dark, Even your own shadow doesn't follow you. -Hitler
அதற்கு இருக்கிறதே சில... ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் அன்று என்னோடு தேவைக்காக
மாத்திரம் பழகி, உதவிபெற்று, உல்லாசத்துக்காக பழகிய பலர் (முக்கியமாக 83 ன் பின்னர்)
நான் அவர்களிடம், எதுவும் எதிர்பார்க்கவுமில்லை. கண்டாலும் காணாததுபோல் போவதை
கண்கூடாகக் கண்டிருக்கிறேன். அன்று என்னுடன் பழகிய சில நண்பர்களிடம் என்னைக் கேட்டால்,
யார் அவர் எனக் கேட்பார்கள்?.... ஏனெனில் அவர்கள் பழைமை மறந்து இன்று காட்டும்
போலிவாழ்க்கைக்கு பங்கம் வருமென்ற பயமோ?
‘If the cap fits, wear it.’