Fonts cont... 1
எழுத்துருக்களும்..
என் கலைவாழ்வில் நடந்த சில சம்பவங்களும்...
அன்று மதுரையை எரித்த கண்ணகியே
இன்று நீ எம் மண்ணையே காத்து நின்றாய்
காவல் தெய்வமான கண்ணகி யே நீ காணாத கணணியா?
தாயே... பரணி காண உனக்கும்.... ஒரு எழுத்துரு.....

பெற்ற தாயும், பிறந்த பொன் நாடும்
நற்றவை வானினும் நனி சிறந்தனவே.
பிறந்த ஊராம் காரைதீ(வு) வில்
தவழ்ந்து, எழுந்து, நடந்து, ஓடி, விளையாடி,
விழுந்து, உருண்டு, பிரண்ட நாட்களை
நினைக்கையில் இனிக்குதே நெஞ்சம்.
நீரால்தான் ஞானஸ்நானம் (திருமுழுக்கு),
மண்ணெய்யாலுமா? (Kerosene Oil)
எனது சிறுபிள்ளைப் பராயத்தில், எனது தந்தையார் ஓய்வு நேரங்களில்விளம்பரப் பலகைகள் தவிர,
தனது பாடசாலையில், இலகுமுறையில் பாடங்களை, படங்கள் மூலம் கற்பிப்பதற்குத் தேவையான
பாடவிதான சித்திரங்களையும், கதைச்சித்திரங்களையும் வரைவது வழக்கம். அவ்வேளைகளில்,
நான் மேசையில் ஏறி உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். எனது தந்தைக்கு கோபம் என்பது கனவிலும்
வருவது கிடையாது. ஏனென்றால் அவர் தம்பிலுவில் மேற்குப் பாடசாலையில் அதிபராக இருந்த வேளையில்,
பெரியய்யா உன்னை வரட்டாமென ஏதும் குழறுபடி செய்த மாணவனைக் கூப்பிட்டால், அவன் சிறுநீர் கழித்து அழுது
செல்வதை பலமுறை என் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அவர் பார்த்தாலே நாங்கள் நடுங்குவதுண்டு.

ஒருநாள் அவர் ஒரு கடையின் விளம்பரப்பலகையை வரைந்துகொண்டிருந்த
வேளையில், மேசையில் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நான்
தவறி கைதடுக்கி வெள்ளை மை முழு ரின்னை கீழே தட்டிவிட்டு விட்டேன்.
அதுவும் ஒயில் மை ரின். என் தலையிலிருந்து கால் வரை மை
வழிந்தோடுகிறது. நடு நடுங்கி பயந்து அவரது முகத்தை நோக்கினேன்.
எனக்கும் சிறுநீர் கழிந்ததோ ஞாபகமில்லை. என்ன நினைத்தாரோ தெரியாது.
ஒன்றுமே பேசாது என்னை அழைத்துப் போய் மண்ணெய்யினால்
தேய்த்துக் குளிப்பாட்டியது, ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம்...
ஞானஸ்நானம் பெற்றது போல் இன்றும் ஞாபகமிருக்கிறது.
எதிர்காலத்தில் நானும் ஒரு ஓவியனாக வர என் மானசீகக்குரு
ஆசீர்வதித்தாரோ என்னவோ தெரியாது.

யாரோ சொல்வது கேட்கிறது... அதென்ன?....
மண்ணெய்யாலும் ஞானஸ்நானமா?
அதிபரானால் நீ கனக(ம்) சபை,
நாங்கள் ஐயா என அழைக்கும்போது
உன் ஓவியங்களும்,
நீயும் ஒரு அழகையா.
பாடசாலை உயர்கல்வி முடித்து, சொந்த ஊரில் ஒரு ஒவியனாக இருந்து கொண்டு தொழில் ரீதியாக
எத்தனையோ நேர்முகப் பரீட்சைகளுக்குத் தோற்றியும், அந்த காலகட்டத்தில் அரசியல் செல்வாக்கும்
தேவைப்பட்டதால், மனமுடைந்து இருந்த வேளையில் தற்போது லண்டனில் வசிக்கும்
திரு.பரமேஸ்வரன் (துரையன்) என்ற உறவின் புத்திகேட்டு கப்பலில் Radio Officer ஆக விரும்பி,
அம்மாவுக்கு ஐஸ் வைத்து கொழும்பு வந்து, மருதானை St. Joseph College ல், Morse Code;
Transmeter repairing பயிற்சிக்கும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தும் விட்டேன்.
அம்மாவிடம் மாதம் 300,- ரூபா தந்தால் போதும், அதுவும் ஒரு சில மாதத்துக்குத்தான் என
அம்மாவை குளையடித்து வென்றதில், என் தந்தைக்கோ சிறிதளவு கூட அதில் உடன்பாடில்லை.
அவர் அப்படித்தான்... அம்மா பாவம் தன் குடும்ப பாரத்தோடு இதையும் தாங்கிக் கொண்டாள்.
கொழும்பில் வீட்டுக்கோ (றுாம்) ரூ. 30,- (4 வருடத்தில் அதே றுாம் ரூ. 300,- ). நான் 83 கலவரத்தின் போது
தங்கியிருந்த 2 றுாம் (annex) பகுதி வீட்டுக்கு நான் செலுத்திய வாடகை மாத்திரம். மாதம் ரூ. 2000,-.

தாயிற் சிறந்த கோயிலுமில்லை
கல்லிலே கடவுளை செதுக்கினான் கலைஞன் - எம்மை
கருவறையிலே செதுக்கினாள் தாய்
சொல்லிலே செதுக்குவதற்காக இவ்வெழுத்துருவை உருவமைத்து
நல்கினேன் விசா (லம்) லாட்சி தாயே! உனக்கு...
அந்த மாத வாடகை ரூ. 30,- 4 வருடத்துக்குள் எப்படி ரூ. 300,- ஆக உயர்கிறது என்பது பெரிய கதை.
சுருக்கமாகக் கூறின் நல்ல நன்றி மறவாத நான் அறிந்த, அறியாத எனது ஊர் நண்பர்களால்தான்.
அரசியல் மாறுபட்ட காலம். சக்கரம் சுழல்வது போல் மாறி மாறி Interview, conferance, Passport எடுக்க,
வெளிநாடு செல்ல, காலாவதியான வாகன லைஸன்ஸ் மாற்ற என தேடி வருவார்கள்.
காலையில் கண் விளிப்பதே இவர்களில்தான். இவனை அனுப்ப அவன் வருவான், அவனை அனுப்ப
மற்றவன் வருவான். மற்றவனை அனுப்ப போனவன் திரும்பி வருவான். இதில் Land lady கோபப்பட்டாலும்,
உள்ளுர அவளுக்கு சந்தோஷம். ஏனென்றால் வாடகையை கூட்ட சுலபமான வழியல்லவா?
றுாமில் நீண்ட நாள் வாடி போட்டவர்களை, ரயில் டிக்கட்டும் எடுத்து கைச்செலவுக்கு பணமும் கொடுக்க
வேண்டியுமிருந்துள்ளது. இந்த விடயத்தில் எனது காலத்தில் கொழும்பில் காவல்துறையில் கடமையாற்றிய,
மற்றும் காரியாலய உத்தியோகஸ்தகர்களாக இருந்த எனது ஊரைச் சேர்ந்த பல நண்பர்களுக்கு நல்ல
அனுபவமுண்டு. பெயர் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்கிறேன். ஆனாலும் இந்த இடத்தில் ஒரு நல்ல நண்பனை
நினைவு கூரவேண்டிய நிர்ப்பந்தமுள்ளது.