Fonts cont... 6
அதிஷ்டமும் வேண்டும்...
இரு தாய்க்கு ஒரு பிள்ளையா?
வசீகரா விளம்பர நிறுவனத்தில் Art Director ஆக கடமையாற்றிய வேளையில்,
திரு.S.K.பரராஜசிங்கம் பாராளுமன்ற மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியதால்,
அப்போது அரச நிறுவனத்தோடு சம்பந்தப்பட்ட ஒருவரின் உதவியால் சித்திர
வேலைப்பாடோடு, அச்சிடுவதும் சேர்ந்த ஒரு பெரிய வேலை எங்கள் நிறுவனத்துக்குக்
கிடைத்தது.
அதற்கு நான் ஒரு (Symbol) சின்னத்தோடு கூடிய, வேலைப்பாட்டை அமைத்து
அச்சிட்டு விநியோகமும் முடிந்தது. அந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கு முத்திரை,
முதல் நாளுறை, போன்றவற்றில் நான் வரைந்த அதே சின்னம், இடம்பெற்றது மட்டுமின்றி
Designer ஆக வழமையாக அரசாங்க முத்திரைகளுக்கு, படம் வரைபவரின் பெயரோடு
புகளும், பரிசிலும் வளங்குவதை, நானும், (எஸ்கே) பராவும் நேரில் பார்த்தோம்.
அதை எங்கள் விளம்பர நிறுவன உரிமையாளர், காவலுார் ராசதுரையிடம் கூறியபோது,
நாம் சிறிய வளரும் நிறுவனம், பிரச்சனைகள் வேண்டாம் எனக் கூறிவிட்டார்.
பரா எனக்கு ஆறுதல் கூறியதோடு, " நமக்கு அதிர்ஷ்டமில்லை மோகன் என்னசெய்வது...
வா... நாம் அதிர்ஷ்ட பானம் அருந்தியாவது நமது மனதைத் தேற்றுவோம்,"
என்றார் அவரது நகைச்சுவை பாணியில். கூறியதோடு மட்டுமல்லாமல் இருவரும்
சென்று மூக்குமுட்ட அதிர்ஷ்ட பானமான துக்கபானம் அருந்தி எங்களை நாங்களே
தேற்றிக் கொண்டோம்.

அந்த வெள்ளை உடுப்போடு வலம்வரும்,...
அந்த வெள்ளைமனம்,...
அந்த இதயரஞ்சனி,....
சங்கீத நாதம் (எஸ்கே)பராவும் துாய்மையாகி விட்டார்
இதுதாண்டா கற்பனை..
உண்மையை நினைத்தால் சிரிப்பு வரும்.....
நான் ஷெனித் அட்வடைசிங் நிறுவனத்தில் Art Director ஆக இருந்த காலத்தில்
திருமணமாக முதல் மூன்று, நான்கு மாதத்திற்கு ஒருமுறைதான் ஊர் செல்வது
வழக்கம். அவ்வளவு வேலைப்பழு. திருமணமாகிய காலத்தில் எண்பத்திமூன்று
கலவரத்தினால் பலமாதங்கள் ஊரிலேயே தங்கவேண்டிய நிர்ப்பந்தமாகிவிட்டது.
எனது நிறுவனத்தார் என்னை வரும்படி பல தகவல்கள் அனுப்பியதுமல்லாமல்
இரு மாதசம்பளமும் அனுப்பியிருந்தார்கள். கல்முனையில் பழையபடி விளம்பர
தொழிலிருந்ததால் மேலும் சில மாதங்கள், தங்கவேண்டியதாயிற்று.
தவிர முதல் பிள்ளையும் பிறந்து விட்டதால், பிள்ளைப் பாசமும், விட்டுப்பிரிய மனமில்லை.
எப்படியோ வேலையை வந்து தொடரவேண்டிய நிலமை. அந்த வேளையில் லீவும் கிடைக்கவில்லை.
பிள்ளையின் எண்ணமே என் மனதை வாட்டத்தொடங்கியது. ஒருவாறு மனேஜருக்கு
ஐஸ் வைத்து லீவு கேட்க, அவரும் சில முக்கிய வேலைகளை முடி, அதிலும் மிக
முக்கியமாக தேசிய காப்புறுதி கூட்டுத்தாபன கலண்டருக்கான மாதிரியையும் முடி
லீவூ தருகிறேன் என்றார். மரமண்டை மூளையில் எந்த ஐடியாவும் வரவில்லை.
பிள்ளையின் முகம் தவிர. இப்படியான வேளைகளில் எங்களுக்கெல்லாம் ஐடியாக்கள்
உதிப்பதே அந்த தாகசாந்தி தரும் இடங்களில்தான். மனேஜர்தான் எங்கள் Copy writer
ஆனபடியால், இருவரும் கற்பனையில் மிதக்க Saphire Hotel ல் உட்காந்து கொண்டோம்.
மயக்கத்தில் கண்மூடி பிள்ளையைக் கனவு கண்ட நான் திடீரென " ஐடியா வந்துவிட்டது
Jaffar " என்றேன். " என்ன... என்ன.. வென்றார்." நான் வாயில் வந்தபடி " ஒரு சிறு
பிள்ளை மணலால் மண்வீடு கட்டி விளையாடுகிறது. வளரும் பயிரை முளையில் தெரியும்....
அந்த சிறுபிள்ளை எதிர்காலத்தில் பெரிய தொரு வீட்டையெண்ணி கனவு காண்கிறது," வாயில்
வந்த ஆங்கிலச்சொல் அத்தனையையும், அந்த மண்டைக்கு கொட்டித்தீர்த்தேன்.
Fantastic.. என்று ஞானியைப்போல் கண்ணை மூடியவன் கண்திறந்து, அவன் வாயால்
சொன்னானே ஒரு பொன்மொழி. " The strong foundation for the great future " என்று.
நான் ஒரு கணம் திகைத்துப்போனேன். என்ன ஒற்றுமை இருவருக்கும். "OK... Finish the
rough visual tomorrow and get ten days free" என்று திருவாய் மொழிந்தார்.
ஒரு கிழமைக்கு பத்து நாட்கள் லீவா.... மாதிரிக் கலண்டர் கொடுத்தது ஞாபகம்.
Quotation பிரச்சனையால், அது அச்சிடப்படவில்லை. ஆனால் ஒருநாள் நான் பயணம்
செய்தபோது ஒரு Overhead bridge ல் காணப்பட்ட காப்புறுதிக் கூட்டுத்தாபன விளம்பரத்தில்
எங்களால் உருவாக்கப்பட்ட பொன்மொழியை அவர்கள் Slogan ஆக பாவித்திருந்தார்கள்.
இதனை நான் கூறியபோது மனேஜர் உடனே போய் பார்த்து வந்ததுமில்லாமல்,
Copy rights க்காக சட்டப்படி நடவடிக்கையும், எடுத்திருப்பதாகச் சொன்னார்.
நல்லதொரு தொகையைக் கறந்திருப்பார்கள் என நினைக்கிறேன்... யார் கண்டார் ...
குருட்டுத்தனமான யோசனைக்கு புகழாரமா?
வசீகராவில் கடமையாற்றிய காலத்தில், திரு. தொண்டமான் அவர்களின் பிறந்த
நாளோடு, அவரின் வாழ்க்கை வரலாற்று (Biography) புத்தக வெளியீட்டுக்குமான
மாபெரும் விழா ராஜ் சமுத்திராவில் இடம்பெற்றது. அதற்கான விளம்பர விடயங்களை
நாங்கள் பொறுப்பேற்றோம். வீதியெல்லாம் வாழை, பூமாலைகள், தோரணங்கள்.
பூக்கள் இந்தியாவிலிருந்து விமானத்தில் வந்தது என்றால் பாருங்களேன்......
அப்போது பெரியதோர் பிறந்த நாள் கேக் பற்றிய விவாதத்தில், அந்த கேக்
வெட்டும் கத்தியை எப்படி அலங்கரிப்பது என்ற ஆராய்ச்சியில் மூழ்கியபோது,
நான் சும்மா பகிடிக்கு பெரிய கேக் ஆனபடியால், பெரிய வாளால் வெட்டினால்
நன்றாயிருக்கும் என்றேன். ஆகா இதுவல்லவா கற்பனையென்று, எல்லோரும்
என்னைப் புகழ்ந்தது மட்டுமல்லாமல், கண்டியிலிருந்து ஓர் புராதன கால
மன்னர் பரம்பரை வாளையும் வரவழைத்து கேக்கை வெட்டினார்கள்.
திரு. தொண்டமான் உட்பட பல பெரிய புள்ளியெல்லாம் என் குருட்டுத்தனமான
யோசனையை நல்லதொரு Creative idea என பாராட்டினார்களாம்.

இதனை என்னிடம் கூறி பெருமைப்பட்டு
எனக்கு உற்சாகம் தந்த அந்த துடிப்பான,
எப்பொழுதும் இளமை குன்றாத,
அந்த பாசவெள்ளம் காவலுார் ராசதுரை எங்கே?...
வர்த்தக கலையில் ஆரம்ப காலத்தில் IBM Type setter வரமுதல் Pasteup Artist ஆக
நாங்கள் பட்டபாடு... மறக்க முடியுமா?... இப்போது நீங்கள் விரும்பிய வெளி உருவக்
கோட்டை (Out line image) கொடுத்தால், கணணி அதனுள் சமப்படுத்தி ஒரு பந்தியோ
இல்லை ஒரு கட்டுரையோ, சில வினாடிகளில் அதன் வடிவுக்கு ஏற்றமுறையில்
அமைத்துவிடும். எங்கள் காலத்தில் நாங்கள் வரிவரியாகவோ, சிலவேளைகளில்
எழுத்தெழுத்தாகவும், பிரித்து வெட்டி ஒட்டவேண்டிய நிலையும் எற்படும்.
உருவமைப்பைப் பொறுத்தது.
ஒரு PHILIPS Anniversary முழுப்பக்க விளம்பரம். மூன்று மொழிகளில்.
மூன்று இரவுகள் கண்முளித்து நானும் chief ம் வேலை செய்தோம்.
விளம்பரத்தின் ஒருபகுதியில் உருண்டைக்குள் (Globe) பந்தியை ஒட்டவேண்டும்.
எப்படி? சமப்பபடுத்துவதானால் கீழிருந்து மேலாக ஒட்டவேண்டுமல்லவா? எனது chief,
Printers லிருந்து வந்த type setting ஐ, வரி வரியாக வெட்டித்தர நான் ஒரு
எழுத்துக்கூடத் தவறாமல், ஒட்டிக்கொண்டிருந்தேன். வட்டம் உப தலையங்கத்தையும் ஒட்ட
நிறைந்தது. பூரண திருப்தி. அப்போது எங்களின் Copy writer ஆகவிருந்த
Trevor Reckerman ஐ அழைத்து வாசித்து சரி பிழை பார்க்கச் சொன்னோம்.
வாசித்துப் போனவர் இடை நிறுத்தி, இன்னுமொருமுறை வாசித்து வந்து நிறுத்தி,
வாயைப் பிதுக்கி தலையையாட்டி missing two words... it is , என்று இந்த இடத்தில்
வரவேண்டுமென்றாரே.... கிளிஞ்சிதிடா.... மூவரும் it is, என்ற சிறுதுண்டை தேடி
அலுத்துவிட்டோம். சரி மற்றத்தாளிலிருந்து அதை வெட்டியெடுத்து திரும்ப ஒட்டுங்கள்
என்று சுலபமாக சொல்லி அவன் போய்விட்டான்.
சீனியருக்கு கோபம் சீவியத்திலும் கிடையாது.
போய் ஒரு Shot Haig ஐ ஊற்றிக்கொண்டு (Office ல் அதா.... என்று கேளாதீர்கள்,
இரண்டு நாளாக கண்முளிப்பதால் பாவம்பார்த்து MD யால் பாவிகளுக்கு உவந்தளித்த
உபகாரமது...) அடிக்கடி நல்லதுக்கும், கெட்டதுக்கும் அவன் பாவிக்கும் அந்த ஆங்கில
உச்சாடனத்தை உச்சரித்தபடி ஆ வென்று ஒரே gulp ல் ஊற்றி என்னைப் பார்த்து
கோபத்தில், " நாங்களென்ன it is.. ஐத் தின்றதா? " என்றான். அப்போதுதான் தவறுதலாக
வாயில் விரலை வைத்த நான் அந்த துண்டு உதட்டிலிருக்கக் கண்டேன். எனக்கு it is...
விளங்கி விட்டது. நல்ல காலம் அவர்கள் இருவரும் காணவில்லையே என
பக்கென்று எடுத்து மறைத்துவிட்டேன். பின்பு என்ன.... திரும்பவும் உரித்து திரும்ப
ஒட்டியதில் இருவருடைய bend ம் எடுபட்டது. மூன்று Full Page மூன்று மொழிகளில்
பல பத்திரிகைகளில் வந்தால் கேட்கவும் வேண்டுமா? Office பெட்டி நிறையும் தானே.
ஒரு சிறிய சந்தோஷ party நடந்தது. அந்த தருணம் பார்த்து Chief கிங்ஸ்லியிடம்
அன்று நடந்ததைக் கூற, அவன் அதை எல்லோரிடமும் கூற விழுந்து விழுந்து
சிரித்தார்கள்... மனேஜர் " Hei... You..." என்று என்னைப் பார்த்து ஆரம்பிக்க
" No.. No.. He is my brilliant assistant" என்று என்னை Chief கிங்ஸ்லி, செல்லமாக
கட்டியணைத்தான். அது ஒரு வசந்தகாலம்..... மீண்டும் வருமா?.....

வாடி வரும் நெஞ்சத்துக்கு தேடி வந்து புத்திசொல்லும்
கே.எம்.வாசக(ர்) ரே...
கூடி நான் உன்னிடம் கறந்த சில ஐடியாக்களை...
பாடிப் பாடி விற்றேன்... விளம்பரச் சந்தையிலே....
ஆடிப் பாடி நாம் வாழ்ந்த அந்த நாட்கள்..
கோடி கோடி கொடுத்தாலும் வராதய்யா....
நீர் தான் அவசரமாக ஓடிவிட்டீரே...
தொடர்ச்சி மறு பக்கம்..