நான் என்னும் மமதை அகற்றிக் கொள்! ... நான் இன்றியும் உலகம் இயங்கும் அறிந்து கொள் ! .. நாக்கை அடக்கினால் நான் என்பது அடங்கும் ! ... நாம் அனைவரும் ஒன்றே என்பதும் விளங்கும்! ...
உலகம் மனிதர்களுக்காக உருவானதா? இல்லை மனிதர்கள் உலகத்தை உருவாக்கினார்களா? இதில் நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று தனக்குத்தானே சுய விமரிசனம் எழுதி, சுய விளம்பரம் என்பது தேவையா?
முதலில் இந்த உலகம் உருவாக மற்றவர்கள் செய்யாததைவிட நீ என்ன செய்தாய் என்பதைச்சொல்... உன்னையே அந்த உலகத்தை உருவாக்கிய கடவுளாகப் போற்றுகிறேன்...
இன்றைய எமது நாயகன்... உலகமறிந்த ஒரு
மனிதர், பெரிய பணக்காரர்களில் ஒருவர், அறிஞர்,
தர்ம நிறுவனமொன்றின் சொந்தக்காரர் இப்படிப் பல....
இவர் கல்லூரிக்கு சென்ற ஒரு பட்டதாரியல்ல...
இவர் கணினி உலகத்தை ஆட்டிப்படைக்கும்
மைக்ரோசொப்ற் (Microsoft)
நிறுவனத்தின் தற்போதைய
உரிமையாளரும், முன்னைநாள் நிர்வாக தலைவருமாவார்.
இவரது சொத்துக்களின் பெறுமதி, 61 கோடி டொலருக்குமதிகமானது.
இவர் இந்த நிறுவனத்தை 1975 ம் ஆண்டு தனது
நண்பரான போல் அலன் என்பவருடன் ஆரம்பித்தார்.
இவர் 1987 ம் ஆண்டின் உலகத்தின் இளவயது கோடீஸ்வரர்களில்
ஒருவர் எனும் தரத்தைப்பெற்றார். இவர் தனது 32 வயதில்
Pages of Forbes எனும் மதிப்பீட்டுப் பத்திரிகை தெரிவு செய்த
அமெரிக்காவின் 400 பெரிய பணக்காரர்களில் ஒருவராகத்
தெரிவானார்.
அறிமுகம்:
பெயர்: வில்லியம் ஹென்றி பில் கேட்ஸ் III
பிறப்பு: 28 அக்டோபர் 1955,
குடியமர்வு... அமெரிக்கா
வயது: 58
தொழிலதிபர், கணினி நிரலர், (Programmer) வள்ளல், நூலாசிரியர்
புத்தகங்கள்: The Road Ahead, Business @ the Speed of
Thought
இவரைப் பற்றிய குறிப்புகள்:
1995 - 2009 உலகப் பணக்காரர்களில் முதலிடத்தைப்பெற்றவர், 2008 ல் மூன்றாவது
இடம்.
1973 ல் ஹாவார்ட் சர்வகலாசாலையில் சேர்ந்து, 1975 ல் இடைநிறுத்தி தனது
கனவான கணினிமென்பொருள், கணினி நிரலர் போன்ற துறையில் நாட்டம் கொண்டார்.
13 வது வயதில் தனது முயற்சியில் சொந்தமாக ஓர் programme
ஐ கண்டுபிடித்தது மட்டுமல்லாமல், 20 வயதில் Microsoft நிறுவனத்தை ஆரம்பித்தார். இவரது முதல் programme
TIC, TAC, TOE. கணினியுடன் எதிராக விளையாடும் ஒரு வகை கணினிவிளையாட்டு.
தனது 17 வது வயதில் நண்பன் Paul Allen உடன்
சேர்ந்து அவரது
முதல் துணிகர முயற்சி Traf-O-Data , கணினியின் சாதனைக்கு உதவும்
Intel 8008
processor ஐ கண்டுபிடித்தார். கணினியில் முக்கிய ஆதாரமான
MS
DOS, பின்னர் MS
Windows ஆகிய இயங்கு தளங்களை கண்டுபிடித்து,
தயாரிப்பு திறமைமிக்க பிரபலமான Microsoft நிறுவனத்தை 1975 - 2006
ல்
திறம்பட உலகுக்கு வெளிக்காட்டினார்.
பில் கேட்ஸ் தனது மனைவியாருடன் இணைந்து 2000 ஆண்டில் Bill
& Melinda Gates Foundation எனும் தர்ம நலத்தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, பொது நல எண்ணத்தோடு உலகளாவிய பல அறக்கட்டளை அமைப்புகளுக்கும், விஞ்ஞான ஆராய்ச்சி தொழிலகங்களுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்தார்.
அத்தோடு பில் கேட்ஸ் Microsoft சம்பந்தமான பல முக்கிய விளம்பரங்களிலும்
அவரே தோன்றுவதன் மூலம், தன்னைப் பற்றியே ஒவ்வொரு நிகழ்விலும் பிதற்றி சுயவிளம்பரம் தேடாமல், தன்னடக்கத்துடன், மற்றவர்களுக்கு தான் எப்படி
முன்னேறினேன் என்பதை சொல்வதன் மூலம் தேசத்துக்கு ஒரு எடுத்துக்
காட்டாகவும் திகழ்கிறார்.
பில் கேட்ஸின் சில மேற்கோள்கள்:
If you think your
teacher is tough, wait until you get a boss. He doesn’t have tenure.
If you can’t make it
good, at least make it look good.
Life is not fair; get
used to it.
The Internet is
becoming the town square for the global village of tomorrow.
Your most unhappy
customers are your greatest source of learning.
Whether it’s Google or Apple or free software, we’ve got some
fantastic competitors and it keeps us on our toes.
டேவிட் மக்கின்சி ஒகில்வி 1911 ம் வருடம் ஜூன் மாதம் 23ம் திகதி இங்கிலாந்தில் பிறந்தார், இவர் Fettes College in Edinburgh, Oxford (ஆனாலும் இவர் பட்டதாரியல்ல..) ஆகிய கல்லூரிகளில் கல்வி கற்றார்.
பின்னர், Paris ற்கு இடம் பெயர்ந்து Hotel Majestic சமயலறையில் பணிபுரிந்தாலும், நல்ல ஒழுக்கத்தையும், சந்தைப்படுத்துதல் பற்றிய அறிவையும் தானாகவே வளர்த்துக் கொண்டார். “அப்படியே நான் Hotel Majestic ல் இருந்திருந்தால், வருடக்கணக்கில், ஒரு தொழில் அடிமையாகவும், பயப்பிராந்தியும், நிரந்தரமற்ற வெறுமையான ஒரு வாழ்க்கையும் தான் எனக்கு மிஞ்சியிருக்கும்.” என்று அவரே கூறியிருக்கிறார்.
இங்கிலாந்திற்கு திரும்பவும் வந்த இவர், AEG சமையல் அடுப்பை, வீட்டுக்கு வீடு வினியோகிக்கும் ஒரு விற்பனையாளர் ஆனார். 1935 ல் இவர் AEG விற்பனையாளர்களுக்காக வழி காட்டிக் கையேடு ஒன்றை எழுதினார். இக் கையேடு Fortune Magazine யினால் எக் காலத்திலும் எழுதப்படாத ஒரு சிறந்த விற்பனையாளார்களுக்கான கையேடு” எனப் பாராட்டைப் பெற்றது.
1938 ல் அமெரிக்காவில் குடியேறிய இவர், பல தொழில்களில் ஈடுபட்டு பின்னர், பெனின்ஸ்சுலாவில் ஒரு பண்ணையை வாங்கி விவசாயியானார். போதும் என்ற அளவு சில வருடங்கள் விவசாயியாக வாழ்ந்த அவர், 1948 ல் NewYork க்கு வந்தார். அங்கு NewYork நகரத்தை அடித்தளமாகக் கொண்ட Hewitt, Ogilvy, Benson & Mather (இங்கிலாந்தின் நிதியின் பின்னனியைக் கொண்ட) விளம்பர நிலையங்களில் தொழில் புரிந்தார்.
தனது 38 வது வயதில் தன் விளம்பர நிலைய பங்கு தாரருக்கு ஒரு சிறு குறிப்பினை ஒகில்வி எழுதியனுப்பினார். அதாவது .....
எந்த நிறுவனமாவது இந்த மனிதனை வாடகைக்கு எடுக்குமா? வயது 38, வேலையில்லாதவர். கல்லுரியால் விலக்கப்பட்டவர். ஒரு சமையல்காரர், ஒரு விற்பனையாளர். சமயோசிதமான விவசாயி, சந்தைப்படுத்துதல் என்றால் ஏதும் தெரியாது. ஒரு விளம்பரம் கூட எழுதவில்லை. விளம்பரத் துறையில் நாட்டமுள்ள ஒரு தொழில் (இந்த 38 வயதில்.. ) தேவை. வருடத்திற்கு 5000 டொலர் கிடைத்தால் போதுமானது.
எந்த வொரு அமெரிக்க நிறுவனமாவது இதை வேலைக்கு அமர்த்துமா?
அப்படியிருந்தும் அந்த இங்கிலாந்து நிறுவனம் இவரை வாடகைக்கு அமர்த்தியது. மூன்று வருடத்தில் அகில உலகும் பாராட்டும் ஒரு தரமான விளம்பர எழுத்தாளரானார். அவர் எழுதிய சிறந்த விளம்பரங்களில் சில கீழே... அவர் Rolls Royce காருக்கு எழுதிய விளம்பரம், உலகப் பிரசித்தி பெற்றது.
அவர் எழுதிய ஒவ்வொரு தலையங்கங்களும், விளம்பர சம்பந்தமான புத்தகங்களும், பிரசித்தி பெற்று அவரின் வாடிக்கையாளர்களினதும், நுகர்வோரினதும் நன்மதிப்பைப் பெற்றன. தொழில் புரிந்த நிறுவனமோ உலகத்தில் 10 ஆவது பெரிய விளம்பர நிறுவனமாக பெயர்பெற்றது.
முதல் 20 வருடத்தில், ஒகில்வியின் விளம்பர நிறுவனங்கள் Lever Brothers, General Foods, American Express ஆகியவற்றை கவர்ந்ததுடன், Shell தமது வட அமெரிக்க விளம்பரங்கள் அத்தனையையும் கையளித்தது. Sears நிறுவனம் தமது புதிய விளம்பர சம்பந்தமான பிரச்சாரங்களுக்காக ஒகில்வியையே நாடியது. விளம்பரத்துறையில் குறுகிய கால கட்டத்தில் எவரும் பெற முடியாத மாபெரும் வெற்றியை ஒகில்வி பெற்றார். 1965 ல் ஒகில்வி Mather & Crowther ஓடு ஒன்றிணைத்து ஆரம்பித்த நிறுவனம், கால கட்டத்தில் சர்வதேச மயமான உலகப்பிரசித்தி பெற்ற Ogilvy & Mather ஆக உலக வலம் வந்தது.
1973ல் இளைப்பாறி பின்னர் Paris ல் தனது பண்ணையில் வாழ்ந்தாலும், தனது நிறுவனங்களுக்கு தலைமைத்துவமும் வகித்தார். 1980 ல் இந்தியக் கிளைக்கு தலைமைத்துவமாகி, இந்தியாவில் வசித்தார். 1989 ல் WPP நிறுவனம் Ogilvy Group ஐ கொள்வனவு செய்ததால், தான் WPP ல் மதிப்பிற்குரிய தலைவராக மூன்று வருடங்கள் பணி புரிந்தார்.
விளம்பரம் என்றவுடன், விளம்பரத் தந்தையாக பலராலும் பாராட்டப்பட்ட இந்த மாமனிதர், 1999 ஜூலை மாதம் 21ல் காலமானார். ஆனால் விளம்பர உலகில் ஒரு தலைசிறந்த விளம்பர எழுத்தாளராக இன்றும், எல்லோர் மனதிலும் நிலை கொண்டுள்ளார். இவரது பல்லாயிரக்கணக்கான படைப்புகளில் பொறுக்கி எடுத்த ஒரு சிறு துளியையே உங்கள் பார்வைக்குத் தந்துள்ளேன்.
ஒரு விடயத்தை நாம் எழுதும்போது அது எப்படி மற்றவர்களிடம் போய் சேர்கிறது... அவைகளை வாசிப்பவர்களுக்கு அது எப்படியான நன்மைபயக்கும்... திரும்பத் திரும்ப ஒரே விடயத்தை சிறிது மாற்றிச் சொல்வது அல்லது ஒரே விடயத்தை ஒவ்வொரு செய்தியிலும் சொல்லாமல் சொல்வது வாசிப்பவர்களுக்கு எரிச்சலூட்டாதா? என்பதை சற்று நேரம் சிந்தித்துப் பார்ப்பது அவசியமில்லையா?.... இல்லை இதுவுமொரு சுய விளம்பரத் தந்திரமோ?... கூறியது கூறலும் ஒரு குற்றம்தானே?
ஒகில்வி... ஓர் பிரபல எழுத்தாளர், விளம்பர உலகத்தின் தந்தை... மாமேதை... தன்னம்பிக்கையால் முன்னேறிய ஒரு கோடீஸ்வரர்... இவர் எழுதுவதைப்பற்றி என்ன கூறுகிறார் என்று சற்று பார்ப்போம்.
Manhattan ஐ அடித்தளமாகக் கொண்டு உலகில் 120 நாடுகளில், 450 கிளை நிறுவனங்களையும், கிட்டத்தட்ட 18,000 ஊழியர்களையும் உள்ளடக்கிய Ogilvy & Mather எனும் விளம்பர நிறுவனங்களின் ஆரம்ப கர்த்தாவாக விளங்கிய, விளம்பர உலகத்தின் தந்தையென பலராலும் பாராட்டைப் பெற்ற டேவிட் ஓகில்வியைப் (David Ogilvy) பற்றி 1977 ல் வாசித்தும், விளம்பரத்துறை நண்பர்கள் பலர் எடுத்துக் கூறியும் அறிந்திருக்கிறேன். அவரது அறிவுரைகளை பின்பற்றி பல சிறந்த விளம்பரங்களை உருவாக்கியுமுள்ளோம்....
எப்படி எழுதுவது?
(David Ogilvy) ஒகில்வி அவர்கள் தனது எல்லா நிறுவன ஊழியர்களுக்கும் செப்ரம்பர் 7, 1982 ல் உள்வீட்டுக் குறிப்பு ஒன்று அனுப்பினாராம். அதில் குறிப்பிட்டிருந்த விடயம் "How to write" 'எப்படி எழுதுவது'? என்ற தலைப்பின் கீழ் சில அறிவுரைகளையும் அடக்கியிருந்தது. இந்தச் சிறிய ஓர் அறிவுரை விடயம் ஒரு சிலரையாவது சென்றடைந்தால், அதனால் பலர் நன்மை அடையக்கூடும் என நினைக்கிறேன்.
நல்லவைகளை எழுதுவது... அது ஒரு இயற்கை தந்த கொடையல்ல.... நீ நல்லவைகளை படித்து.. வாசித்து... அதனை நன்றாக யோசித்து.. பலரிடம் விடயத்தை ஆராய்ந்து... தானும் அதைக்கடைப் பிடித்து... மற்றவர்களின் பயன்பாட்டக்கு சேரும் வகையில் எழுதுவதே ஒரு நல்ல எழுத்தாளனுக்கு அழகும், நன்மையும் தரும்...
இதோ (David Ogilvy) ஒகில்வியின் அந்த குறிப்புகள்:.....
நீ இயற்கையாக... பேசுவது போலவே.. எழுது...
சிறு சொற்களை... சிறிய வசனங்களை பாவித்து.... சிறிய பந்திகளாக எழுது...
மிகைப்படுத்தி, உளறல் வார்த்தைகள், கருத்துக்குமாறாக, மனப்பான்மையின்றி நியாயப்படுத்தி எழுதுவது தனித்துவமான பகட்டுத்தன்மையாகும்.
ஓர் விடயத்தைப்பற்றி இரு பக்கங்களுக்கு மேல் எழுதாதே...
எதையாவது மேற்கோள்காட்டி எழுதியிருப்பின்... மீண்டுமொருமுறை அதை சரிபார்த்துக்கொள்...
எழுதியதை உடனே அனுப்பாதே! பிரசுரியாதே! அதனை அடுத்த நாள் காலையில் பலமாக வாசித்து திருத்தியமைத்துக்கொள்....
முக்கியமான விடயத்தைக் கூறுமுன்.. இன்னும் பலருடன்... அதை அலசி ஆரரய்ந்து கொள்.....
எழுதியதை அனுப்புமுன் தெட்டத்தெளிவாக நான் சொல்ல வருவதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்களா என முடிவெடுத்துக்கொள்...
** நீ எழுதுவதை செயற்படுத்தவேண்டுமெனில்.... எழுதாதே.... நீ நேரிலேயே போய் அவர்களிடம் கூறு... உனக்கு என்ன தேவை... எதனை எதிர்பார்க்கிறாய் என்பதைக்கூறு.... - டேவிட் ஒகில்வி -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (Source: The Unpublished David Ogilvy: A Selection of His Writings from the Files of His Partners) ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I I